பிரயாக்ராஜ்: கொரோனா பாதிப்பின் காரணமாக, நாடு முழுவதும், ரயில்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே, கொரோனாவால், தனிமையில் வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ரயில் பெட்டிகளை, தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, வட மத்திய ரயில்வே பொது மேலாளர், ராஜிவ் சவுத்ரி கூறும்போது, ''டில்லியில், ஒரு ரயில் பெட்டியை, தனிமை வார்டாக மாற்றும் பணி நடக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம், நாட்டின் பல்வேறு பகுதிகள், மருத்துவமனைகளில், உணவு வினியோகம் செய்யவும், தயாராகி வருகிறது,'' என்றார்.