புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது. அதில் 79 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகினர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 180 பேரும், கேரளாவில் 173 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மஹாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடகாவில் 2 பேரும், ம.பி., தமிழகம், பீஹார், பஞ்சாப், டில்லி, மேற்கு வங்கம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.